/உள்ளூர் செய்திகள்/மதுரை/திறக்கும் முன் தீப்பற்றிய மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்திறக்கும் முன் தீப்பற்றிய மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்
திறக்கும் முன் தீப்பற்றிய மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்
திறக்கும் முன் தீப்பற்றிய மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்
திறக்கும் முன் தீப்பற்றிய மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்
ADDED : பிப் 24, 2024 05:00 AM

மதுரை : மதுரையில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு திறப்பு விழா நடக்க இருந்த பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக முதல் தளத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இவ்வணிக வளாகம் ரூ.119 கோடியில் கட்டப்பட்டு 95 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் வயரிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு 462 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழா காண இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி வெங்கட்ரமணன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: முதல் தளத்தில் பாலிதீன் பைகள், மின் உபகரண அட்டை பெட்டிகள் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் தீப்பற்றியது. வளாகத்தில் தீயணைப்பு உபகரணங்கள், புகை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மின் இணைப்பு இல்லாததால் இக்கருவிகள் வேலை செய்யவில்லை என்றனர்.
திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.