Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'இலக்கியங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்'

'இலக்கியங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்'

'இலக்கியங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்'

'இலக்கியங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்'

ADDED : மார் 21, 2025 03:42 AM


Google News
மதுரை : ''இலக்கியங்களை நம் மாணவர்களுக்குச் சரியாக சொல்லிக் கொடுக்கவேண்டும்'' என மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த 'தமிழ்க்கூடல்' நிகழ்வில் ராமநாதபுரம் சேது இலக்கியப் பேரவை நிறுவனர் சுந்தரராஜன் பேசினார். சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர்அவ்வை அருள் தலைமை வகித்தார்.

'இலக்கை நோக்கி இலக்கியங்கள்' என்ற தலைப்பில் சுந்தரராஜன் பேசியதாவது: இலக்கை நோக்கி மனிதர்கள் பயணிக்கவேண்டும். சங்க காலம் பெண்களுக்கு நுட்பமான கல்வியைக் கொடுத்தது. ஒருவன் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் நிதானமாக இருந்தால் பிரச்னை வராது. அவ்வையாரின் நல்வழிப்பாடலில் 'வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்' எனத்தொடங்குகிறது. வலிமையான யானை மீது பட்டு ஊடுருவும் அம்பானது பஞ்சுப் பொதியில் பட்டு ஊடுருவ இயலாது என்பது இதன் பொருள். கோபமான வார்தைகளால் எதையும் சாதிக்க முடியாது. அன்பான வார்த்தைகளால் சாதிக்கலாம். எனவே இலக்கியங்களை நம் மாணவர்களுக்குச் சரியாக சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றார்.

ராமநாதபுரம் முத்தமிழ் மன்றத்தலைவர் மானுடப்பிரியன் பேசுகையில்,''யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலின் மூலம் மானுடச் சமுதாயத்திற்கான மகத்தான தத்துவத்தைக் கூறியவன் தமிழன். வறண்ட நிலத்தில் செல்லும்போது குறைந்த அளவு தண்ணீரைக் கண்ட ஆண், பெண் மான்கள் மாறி மாறி அருந்தாமல் தவிர்க்கின்றன என்பதை ஐந்திணை ஐம்பது கூறுகிறது. விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பாடம் புகட்டிய பண்பாடு தமிழருக்கானது'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us