மாட்டுத்தாவணியில் நுாலகம் திறப்பு
மாட்டுத்தாவணியில் நுாலகம் திறப்பு
மாட்டுத்தாவணியில் நுாலகம் திறப்பு
ADDED : ஜூன் 11, 2025 06:48 AM
மதுரை தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நுாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி, பொது நுாலகத்துறை சார்பில் அமைக்கப்பட்ட நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
நுாலகத்தில் மேயர் இந்திராணி குத்து விளக்கேற்றினார். துணை மேயர் நாகராஜன், துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், மாவட்ட நுாலகர் பாலசரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாலசரஸ்வதி கூறுகையில் ''மாநகராட்சி இடம் வழங்கியுள்ளது. தேவையான புத்தகங்கள், நாளிதழ்கள் பொது நுாலகத்துறை வழங்கியுள்ளது. இதை கண்காணிக்க நுாலகர் நியமிக்கப்பட்டுள்ளார்'' என்றார்.