Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வைரஸோடு வாழ பழகுவோம்

வைரஸோடு வாழ பழகுவோம்

வைரஸோடு வாழ பழகுவோம்

வைரஸோடு வாழ பழகுவோம்

ADDED : ஜூன் 15, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
கொரோனா என்ற கொடிய தொற்றின் தாக்கம் மறைந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. நோயின் நேரடி பாதிப்பை விட அதன் பின்விளைவுகளான சமூக, பொருளாதாரச் சீரழிவுகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

எல்லாம் ஒரு வழியாய் ஓய்ந்தது என்று இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். அதற்குள் மீண்டும் சலசலப்பு. ஹாங்காங்கில் சில, சிங்கப்பூரில் சில என்று செய்திகள் வரத் தொடங்கின. ஹாங்காங், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவதற்கு எத்தனை மணி நேரம் வந்துவிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக நம் நாட்டில் கொரோனா மீண்டும் கால் பதித்து விட்டது. தற்போது வரை சுமார் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் போல் இந்த முறையும் முதல் கேஸ் கேரளாவில்தான்.

இந்த முறை - மரபணு மாற்றம் அடைந்த, வீரியம் குறைந்த வைரஸ் தான் காரணம் என்பது ஆறுதல். தடுப்பு ஊசி கண்டுபிடித்து விட்டோம், இது கொரோனாவைத் தடுக்கும் என்று நம்பினோம். தடுப்பூசிகள் அப்படி ஒன்றும் பாதுகாப்பானவையும் இல்லை (லண்டன் நீதிமன்றத்தில் மருந்து நிறுவனங்களே இதை ஒத்துக் கொண்டன). எப்படியோ, மந்தை எதிர்ப்பு சக்தி என்ற தத்துவத்தில் கொரோனா ஒரு வழியாக ஓய்ந்தது.

இந்த முறை வித்தியாசங்கள்


இந்த முறை கொரோனா தாக்கம் முன்னை விட நிறைய மாறுபட்டிருக்கிறது.

1வீரியம் குறைந்த வைரஸ் -அதனால் நோய் பாதிப்பும் மிகவும் மிதமே. தொண்டை வலி, இருமல், காய்ச்சல் உண்டு - ஆனால் மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் எல்லாம் தேவையில்லை. சர்க்கரை நோய், இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய்கள் உள்ளவர்களே இறக்க நேரிடுகிறது. சிறுவர், முதியவர், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படலாம்.

2 சாதாரண மருந்துகளே போதும். ரெம்டெசிவிர் போன்ற மிக விலை உயர்ந்த மருந்துகளைப் பற்றி இப்போது யாரும் பேசவில்லை.

3மீண்டும் தடுப்பு ஊசி போடுங்கள் என்று இப்போது யாரும் சொல்லவில்லை. புதிய தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என்று எந்த பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளும் அறிக்கை விடவில்லை.

4ஊரடங்கு என்ற வார்த்தையை யாரும் மறந்து கூட உச்சரிக்கவில்லை.

5முகக்கவசம் போடுவது நல்லது. ஆனால் உங்கள் இஷ்டம் என்று மட்டுமே சொல்கிறார்கள்.

முகக்கவசம் அணியுங்கள்


1 முகக் கவசம் மிகவும் நல்லது. மிகவும் மாசுபட்ட சுற்றுச்சூழல் உள்ள நம் நாட்டில் வருடம் முழுவதுமே முகக் கவசம் அணிவது நல்லது. ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் எப்போதும் இதை அணிவது வாடிக்கை. நாமும் இந்த நல்ல பழக்கத்தைப் பின்பற்றலாமே.

2 சமூக இடைவெளி எப்போதும் கடைபிடிப்போம்.

3 இஞ்சி, மிளகு, பூண்டு, எலுமிச்சை போன்ற மலிவான நாட்டு மருந்துகள் நல்லது. பயனுள்ள சில நாட்டு/ வீட்டு மருத்துவ முறைகளைப் பின்பற்றுவது தவறல்ல. நம்முடைய சமையலில் பயன்படும் பல மசாலா பொருட்களில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உள்ளன.

4 சின்கோனா மரப் பட்டையிலிருந்து எடுக்கும் HCQS என்ற மருந்து மலேரியாவை ஒழிப்பதில் பெரும்பங்கு ஆற்றியது. கொரோனாவுக்கும் அது அரிய மருந்து என்று ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்தன. பல நாடுகளும் இதை வெற்றிகரமாக பயன்படுத்தின.

வெறும் ஐந்து ரூபாயில் குணமாக்கும் HCQS மாத்திரையால், தங்களுடைய ஊசி மருந்து வியாபாரம் படுத்து விடும் என்று பயந்து பன்னாட்டு நிறுவனங்கள் அது இதயத்துக்கு ஆபத்து விளைவிக்கும் என்று பிரசாரம் ஆரம்பித்தன. 'லான்செட்' போன்ற புகழ்பெற்ற மருத்துவ இதழ்கள் கட்டுரை வெளியிட்டன. அதனால் உலகம் முழுக்க டாக்டர்கள் பயந்து ஐந்து ரூபாய் மருந்துகளுக்கு பதில் 50 ஆயிரம் ரூபாய் மருந்தை உபயோகித்தனர். பின்னர் எல்லாம் முடிந்த பிறகு, எங்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தினால் அப்படி கட்டுரையை வெளியிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று லான்செட் இதழே செய்தி வெளியிட்டது. தலைமுறை, தலைமுறையாய் பயன்பட்டு வரும் இந்த HCQS இப்போதும் நல்ல மருந்துதான்.

கேரளாவில் பல மலைக் கிராமங்களில் வீட்டில் 'கொய்னா மருந்து' (மரப்பட்டை கஷாயம்) வைத்திருப்பார்கள். காய்ச்சல் வரும்போதெல்லாம் அதை உபயோகிப்பார்களாம்.

கொரோனா அலை எப்போதும் ஓயப்போவதில்லை. இந்த வைரஸ் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை சுற்றிக்கொண்டே தான் இருக்கும். இதோடு வாழ கற்றுக் கொள்வோம்.

- -டாக்டர் சவுந்தரபாண்டியன்சிறுநீரக இயல் சிறப்பு மருத்துவர்மதுரை. 94433 82830





      Our Apps Available On




      Dinamalar

      Follow us