Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வழக்கறிஞர் கொலை: விசாரணை மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர் கொலை: விசாரணை மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர் கொலை: விசாரணை மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர் கொலை: விசாரணை மாற்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : செப் 11, 2025 11:28 PM


Google News
மதுரை: மதுரையில் வழக்கறிஞர் பகலவன் கொலை வழக்கு ஆவணங்களை தல்லாகுளம் உதவி கமிஷனரிடம் ஒப்படைக்க அண்ணாநகர் போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை சியாமளா தாக்கல் செய்த மனு: எனது கணவர் பகலவன். வழக்கறிஞர். செப்.4 காலை 5:00 மணிக்கு நடைபயிற்சி சென்றார். அவரை 3 பேர் மரக்கட்டை, கற்களால் தாக்கினர். காயமடைந்த கணவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் செப்.8 ல் இறந்தார். அண்ணாநகர் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. சம்பவத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கவில்லை. விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சுந்தர்மோகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் திருநாவுக்கரசு ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு ஆவணங்களை மதுரை தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனரிடம், அண்ணாநகர் போலீசார் ஒப்படைக்க வேண்டும். விசாரணையை மதுரைவடக்கு போலீஸ் துணை கமிஷனர் கண்காணிக்க வேண்டும். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து உதவி கமிஷனர் அக்.9 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us