ADDED : ஜூலை 03, 2025 03:31 AM
மேலுார்: மேலுார் காமாட்சி அம்மன் - கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 28ல் வாஸ்து சாந்தி செய்யப்பட்டது.
ஜூன் 29 முதல் நேற்று ஜூலை 2 வரை யாகசாலை பூஜைகள் நடந்தன. ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவில் கும்பத்தில் சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தொடர்ந்து கல்யாண சுந்தரேஸ்வரர் - காமாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மேலுார் தாலுகா முழுவதும் இருந்து பலஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் முருகன், செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி செய்திருந்தனர்.