/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பருவநிலை மாற்றத்தால் சோடையாகும் மல்லிகை விவசாயிகள் கவலை பருவநிலை மாற்றத்தால் சோடையாகும் மல்லிகை விவசாயிகள் கவலை
பருவநிலை மாற்றத்தால் சோடையாகும் மல்லிகை விவசாயிகள் கவலை
பருவநிலை மாற்றத்தால் சோடையாகும் மல்லிகை விவசாயிகள் கவலை
பருவநிலை மாற்றத்தால் சோடையாகும் மல்லிகை விவசாயிகள் கவலை
ADDED : செப் 22, 2025 03:19 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி, எழுமலை பகுதி கிராமங்களில் விவசாயிகள் பரவலாக மல்லிகை பூக்கள் பயிரிட்டுள்ளனர். தினசரி உசிலம்பட்டி பூ மார்க்கெட்டுக்கு 10 டன் பூக்கள் வரத்து உள்ளது. சில வாரங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக மொட்டுகள் சரியாக வளர்ச்சி பெறாமல் பாதியாக சுருங்கி சோடையாக மாறி வருகிறது. இதனால் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதால், தினமும் வரத்து 3 டன் அளவில் உள்ளது.
கோடாங்கிநாயக்கன்பட்டி செல்வி கூறியதாவது: தோட்டத்தில் மூன்று பிரிவுகளாக மல்லிகை பயிரிட்டுள்ளோம். தற்போதுசிறிய செடியாக உள்ளவற்றில் இந்த பாதிப்பு அதிகம் தெரியவில்லை. மற்ற செடிகளில் மொட்டுகள் நீளமாக வளராமல் சுருங்கி பழுப்பு நிறமாக மாறிவிடுகின்றன. இதனால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீசன் நேரங்களில் விலை அதிகமாக இருக்கும். தற்போது கிலோ ரூ.500 வரை விற்கும் நிலையில் பூக்கள் செடிகளிலேயே சோடையாக மாறி 10 கிலோ கிடைக்க வேண்டிய செடிகளில் 2 கிலோ அளவில்தான் நல்ல பூக்கள் கிடைக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது என்றார்.