பாசன கால்வாய்களை துார் வார வேண்டும்
பாசன கால்வாய்களை துார் வார வேண்டும்
பாசன கால்வாய்களை துார் வார வேண்டும்
ADDED : ஜூன் 11, 2025 05:39 AM
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் தங்களுடைய தேவைகளை குறித்து பேசினார்.
கொட்டாம்பட்டி வாரச்சந்தையில் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கடைகள் வழங்க வேண்டும். தும்பைப்பட்டி அப்பச்சி கண்மாயிலிருந்து பூதமங்கலம் கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலை மராமத்து பார்க்க வேண்டும். தவிர பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் மேலுார் ஒரு போக பாசன பகுதி முழுவதிலும் உள்ள கண்மாய் மற்றும் கால்வாய்களை மராமத்து பார்க்க வேண்டும் என்றனர். விவசாயிகள் கிருஷ்ணன், அருண், மணி, பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.