/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

பள்ளி, கல்லுாரி
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் அகாடமிக்ஸ் டாக்டர் பிரியா, யோகா பயிற்றுனர் ஸ்ரீதேவி யோகாவின் முக்கியத்துவம், நன்மை பற்றி பேசினர். ஆசிரியர்கள், ஊழியர்கள் யோகாசனம் செய்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குனர் பாண்டியராஜன் செய்தார். மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சூரியபிரபா யோகா தினம் பற்றி பேசினார். மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
நீதிமன்றம், ரயில்வே
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.புகழேந்தி, எஸ்.ஸ்ரீமதி, ஆர்.பூர்ணிமா, பதிவாளர்கள் அப்துல் காதர்(நீதித்துறை), பிரேம்குமார் (நிர்வாகம்) மற்றும் அலுவலர்கள், சி.ஐ.எஸ்.எப்.,வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் யோகா செய்தனர். மதுரை ரயில்வே காலனி மைதானத்தில் கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா யோகா பயிற்சியை துவக்கி வைத்தார்.
சோழவந்தான்
திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். ஜி.எஸ். உடற்கல்வி கல்லுாரி முதல்வர் செல்வம் யோகப் பயிற்சியின் அவசியம், நன்மை குறித்து பேசினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி, சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கி பேசினர். உடற்கல்வி இயக்குனர் நிரேந்திரன், யோகா ஆசிரியர் இருளப்பன், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் பேசினார். துணை முதல்வர் சந்திரசேகரன் ஒருங்கிணைத்தார்.
திருநகர்
தனக்கன்குளம் யோகாநகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகிராமலிங்கம் தலைமை வகித்தார். '40 மாவட்டங்களிலும் 4 லட்சம் பேர் ஒரே நேரத்தில் யோகாசன பயிற்சி செய்தனர்' என்றார். பா.ஜ., திருப்பரங்குன்றம் நகர் மண்டல் சார்பில் தென்பரங்குன்றத்தில் மண்டல தலைவர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் ராக்கப்பன், முருகன், கபிலன், பாண்டியராஜன், வெற்றிவேல்முருகன், மணிகண்டன், கோதண்டராமன் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.