Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திட்டப்பணி ஆய்வு செய்வது எப்படி உதயநிதிக்கு உதயகுமார் யோசனை

திட்டப்பணி ஆய்வு செய்வது எப்படி உதயநிதிக்கு உதயகுமார் யோசனை

திட்டப்பணி ஆய்வு செய்வது எப்படி உதயநிதிக்கு உதயகுமார் யோசனை

திட்டப்பணி ஆய்வு செய்வது எப்படி உதயநிதிக்கு உதயகுமார் யோசனை

UPDATED : செப் 23, 2025 05:16 AMADDED : செப் 23, 2025 04:21 AM


Google News
பேரையூர்: 'மத்திய - மாநில அரசுகளின் திட்டப் பணிகளில் முறைகேடு நடக்கிறது' என, சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.

டி.கல்லுப்பட்டி அழகுநாச்சி ஊருணி சுற்றுச்சுவர் இடிந்ததை கண்டித்து ஊரணிக் கரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் உதயகுமார் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:

டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அழகு நாச்சி ஊருணி , ரூ.50 லட்சம் மத்திய அரசு நிதி, ரூ.20 லட்சம் பொது நிதி என ரூ.70 லட்சம் மதிப்பில் துார்வாரப்பட்டது. இதில் தரமற்ற முறையில் சுற்றுச்சுவர் கட்டியதால் 2 மாதங்களில் விழுந்துவிட்டது. அதேபோல் மூப்பர் ஊருணி யில் ரூ.78 லட்சம் மதிப்பில் பணிகள் நடக்கிறது. அதுவும் தரமற்ற பணியாக உள்ளது.

பண்டாரங்குளம் பகுதியில் துாய்மை இந்தியா திட்டத்தில் ரூ.6 கோடியில் பணிகள் நடக்கிறது. இதில் கழிவு நீர் வெளியே செல்ல எந்தத் திட்டமும் இல்லை. இதுபோன்ற திட்டப் பணிகள் முறைகேடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டருக்கு கடிதம் அனுப்பி வருகிறோம்.

திருமங்கலம் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடக்கிறது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தாலும் அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாலைகள் எல்லாம் தரமாற்றதாக உள்ளதால் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. மதுரை வரும் துணை முதல்வர் உதயநிதி, கண்துடைப்பாக திட்டப் பணிகள் ஆய்வை மேற்கொள்ளக்கூடாது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us