/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'ஹாட் பாக்ஸ்' அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'ஹாட் பாக்ஸ்'
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'ஹாட் பாக்ஸ்'
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'ஹாட் பாக்ஸ்'
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'ஹாட் பாக்ஸ்'
ADDED : ஜூன் 23, 2025 04:52 AM
திருநகர் : திருநகரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பகுதிச் செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு இது இலையுதிர் காலம். வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் முதல்வர் ஸ்டாலின் திணறுகிறார்.
தமிழகத்தில் கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் நடக்காத நாட்களே இல்லை என்றாகி விட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக பெண்கள், போலீசாருக்குக் கூட பாதுகாப்பு இல்லை. அனைத்து துறைகளும் சீரழிந்து விட்டன. குற்றவாளிகளுக்கு தினம் மாவுக் கட்டு போடுவது தான் தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது என்றார்.
தேர்தல் பார்வையாளர் காந்தி ஆலோசனைகள் வழங்கினார். பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் மோகன்தாஸ், பாலமுருகன் கலந்து கொண்டனர். பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.