
மேலுார் : உறங்கான்பட்டி காளமேக பெருமாள் கோயில் ஆனி மாதத் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 15 முதல் பக்தர்கள் விரதம் இருந்தனர். எட்டாம் நாளான நேற்று உறங்கான்பட்டி மந்தையில் இருந்து புரவிகளை ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இத் திருவிழாவில் உறங்கான்பட்டி, கொட்டாணி பட்டி, அழகிச்சிப்பட்டி கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.