Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இணையவழி பணியாற்றும் 'கிக்' தொழிலாளர் சேர்க்கை

இணையவழி பணியாற்றும் 'கிக்' தொழிலாளர் சேர்க்கை

இணையவழி பணியாற்றும் 'கிக்' தொழிலாளர் சேர்க்கை

இணையவழி பணியாற்றும் 'கிக்' தொழிலாளர் சேர்க்கை

ADDED : ஜூலை 03, 2025 03:32 AM


Google News
மதுரை: இணையம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் (கிக் தொழிலாளர்) நலனை பாதுகாக்க அவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து 'தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களும் உறுப்பினராக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஜூலை 21 வரை தினமும் காலை 11:00 மணி முதல் பதிவு சிறப்பு முகாம் நடக்க உள்ளது. ஜூலை 3ல் சர்வேயர் காலனி டெம்பிள் சிட்டி, 4ல் காளவாசல் மகளிர் பால்பண்ணை, 5ல் அண்ணாநகர் நியூமாஸ், 7ல் தல்லாகுளம் கார்னிவல், 8 ல்- ஆத்திக்குளம் அம்மன் ஓட்டல், 9ல்- வில்லாபுரம் பேச்சியம்மன், 10ல் பைபாஸ் ரோடு ராம்நகர் கே.எப்.சி.,ல் நடக்கிறது.

ஜூலை 11 ல் திருப்பரங்குன்றம் மோட்டோஸ்பேஸில், 12ல் காமராஜர் ரோடு அம்மன், சபரீஸ், 14ல் திருநகர் 12 மணி பிரியாணி, 15ல் கே.கே.நகர் 12 மணி பிரியாணி, 16ல் அய்யர்பங்களா கே.எப்.சி., 17ல் பூமார்க்கெட் ஆசாத் பிரியாணி, 18ல் எல்லீஸ்நகர் 12 மணி பிரியாணி, 19ல் விரகனுார் ரிங்ரோடு பஞ்சாபி தாபா, 21ல் விளக்குத்துாண் ஏ2பி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.

இதில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகன மானியம், கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், முடக்க ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து, ஊனம் போன்வற்றுக்கான நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படும். விவரங்களுக்கு 90031 14821 ல் தொடர்பு கொள்ளலாம் என, தொழிலாளர் உதவி ஆணையர் பாரி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us