/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீசில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் புகார் போலீசில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் புகார்
போலீசில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் புகார்
போலீசில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் புகார்
போலீசில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் புகார்
ADDED : மே 21, 2025 05:00 AM
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் சமயத்தில் பக்தர்கள் மத்தியில் செருப்புகளை வீசி விழாவை சீர்குலைக்க முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் ஹிந்து ஆலயப்பாதுகாப்பு இயக்கம் புகார் அளித்துள்ளது.
மாநில துணைத்தலைவர் பி.சுந்தரவடிவேல் அளித்த மனு: கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12-ல் நடந்தது.
அப்போது சிலர் ஆற்றுக்குள் பக்தர்களுக்கு மத்தியில் செருப்புகளை வீசி எறிந்து குழப்பத்தை ஏற்படுத்தினர். இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். ஜாதி வேறுபாடுகளை மறந்து அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக கொண்டாடிய திருவிழாவை சிலர் சீர்குலைக்க திட்டமிட்டனர். அவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.