Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : மே 18, 2025 06:27 AM


Google News
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் பெரியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருமயம் அருகே தேக்காட்டூரில் 'பிள்ளையார் குளம்' நீர்நிலை உள்ளது. அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர், ஆர்.டி.ஓ.,திருமயம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: அது நீர்நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதை அரசு தரப்பு உறுதி செய்துஉள்ளது. தாசில்தார் அளவீடு செய்யவேண்டும்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us