Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டிரைவர் மரணத்தில் மர்மம் பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

டிரைவர் மரணத்தில் மர்மம் பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

டிரைவர் மரணத்தில் மர்மம் பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

டிரைவர் மரணத்தில் மர்மம் பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : செப் 05, 2025 04:00 AM


Google News
மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர் மரணத்தில் மர்மம் உள்ளதாக தாக்கலான வழக்கில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

திருமங்கலம் அருகே அம்மாபட்டி ராமு துளசி தாக்கல் செய்த மனு: எனது கணவர் ராமகிருஷ்ணன். அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்தார். அவர் இறந்து விட்டதாக செப்.2 ல் தகவல் வந்தது.

துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஆஸ்டின்பட்டி போலீசார் தெரிவித்தனர். உடலில் காயங்கள் உள்ளன. மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளது. எனது முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சுந்தர்மோகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பிரேத பரிசோதனை துவங்கும் முன் உடலை போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்ய மனுதாரரின் சகோதரர் தங்கபாண்டியன் அனுமதிக்கப்படுவார்.

அவர் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் அல்லது எந்த வகையிலும் வெளியிடக்கூடாது. பிரேத பரிசோதனையை போலீஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வீடியோ பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். மனுதாரர் அல்லது அவரது உறவினர்களை பிரேத பரிசோதனையை நேரில் காண அனுமதிக்கக்கூடாது. 2 டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us