/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எழுமலையில் ரூ.20 லட்சத்தில் பயனற்ற பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் எழுமலையில் ரூ.20 லட்சத்தில் பயனற்ற பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
எழுமலையில் ரூ.20 லட்சத்தில் பயனற்ற பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
எழுமலையில் ரூ.20 லட்சத்தில் பயனற்ற பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
எழுமலையில் ரூ.20 லட்சத்தில் பயனற்ற பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூன் 27, 2025 12:44 AM
மதுரை: எழுமலை ராம ரவிக்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
எழுமலையில் ரூ.20 லட்சத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. அங்கு பஸ்கள் வந்து செல்வதில்லை.
வெளியில் மெயின் ரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் தனியார் வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அமைத்ததன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு கலெக்டர், அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர், எழுமலை பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.