ADDED : மார் 25, 2025 04:41 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தினசரி மார்க்கெட் அருகே அம்மா உணவக கழிவுநீரால் சுகாதாரகேடு ஏற்பட்டு பொதுமக்கள், வியாபாரிகள்அவதியுறுகின்றனர்.
உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அருகிலுள்ள கால்வாய்க்குள் செல்வதற்காக பூமிக்குள் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உணவக கழிவுநீர் திறந்த வெளியில் விடப்படுகிறது. மார்க்கெட் கடைகளுக்கு அருகிலேயே தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வியாபாரிகளுக்கு தொற்று நோயை பரப்புகின்றன. கழிவு நீர் பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.