/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு
மணல் திட்டு பறவைகளுக்கு தனி சரணாலயம் வேண்டும்; மன்னார் வளைகுடா கடல் பறவை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பு

ஆழ்கடலில் ஆலா பறவைகள்
குழு உறுப்பினர் ரவீந்திரன் நடராஜன், பறவை ஆய்வாளர்கள் பைஜு, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் குழுவினர், ராமநாதபுர வனத்துறையின் வன உயிரின பிரிவுடன் இணைந்து தொடர் ஆய்வுகள் மூலம் இதை கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை 'ஜேர்னல் ஆப் தி ரெட்டன்ட் டாக்ஸா'வில் வெளியானதாக ரவீந்திரன், பைஜூ தெரிவித்தனர்.
சரணாலயம் வேண்டும்
இந்தியாவைப் பொறுத்தவரை வேறு எந்த இடத்திலும் இவ்வளவு ஆயிரக்கணக்கில் பறவைகள் இருந்தது இல்லை. மணல் திட்டில் கடல் தாவரங்களின் புல்மேட்டில்தான் ஆண்டுக்கு ஒரு முட்டை இடுகின்றன. பெரிய பறவைகள் ஆழ்கடலில் வசித்து தண்ணீரில் மிதந்தபடியே காலத்தை கழித்து விடும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் மணல் திட்டுக்கு வரும். இவற்றின் முட்டைகளை இந்திய, இலங்கை மீனவர்கள் எடுத்துச் செல்வது வேதனையான விஷயம். ஜூனில் இணைசேர்ந்த பின் முட்டையிட தீவுக்கு வரும். இந்த பறவைகள் வலம் வரும் இடங்களில் அதிக மீன்கள் இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.