/உள்ளூர் செய்திகள்/மதுரை/குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாகுடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
ADDED : பிப் 25, 2024 05:29 AM
திருமங்கலம், : திருமங்கலம் 27 வார்டுகள் மற்றும் விரிவாக்க பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52.53 கோடி மதிப்பீட்டில் முள்ளிபள்ளம் வைகையாறு குடிநீர் திட்டத்தை புனரமைத்து தண்ணீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
காணொலியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யா, துணைத்தலைவர் ஆதவன், கமிஷனர் (பொறுப்பு) லீமா, பொறியாளர் ரத்தினவேலு, கவுன்சிலர்கள் வீரக்குமார், சின்னசாமி, ரவி, ரம்ஜான் பேகம், திருக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.