Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 'நல்ல கலெ க் ஷன்' தலைக்கு ரூ.30 ஆயிரம் வசூல்

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 'நல்ல கலெ க் ஷன்' தலைக்கு ரூ.30 ஆயிரம் வசூல்

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 'நல்ல கலெ க் ஷன்' தலைக்கு ரூ.30 ஆயிரம் வசூல்

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 'நல்ல கலெ க் ஷன்' தலைக்கு ரூ.30 ஆயிரம் வசூல்

ADDED : ஜூன் 21, 2025 12:22 AM


Google News
மதுரை: மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர் பற்றாக்குறையால் அவுட் சோர்ஸிங் மூலம் பணிநியமனம் நடக்கிறது. இதற்காக ஊழியர்களிடம் வசூல் வேட்டை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இக்கழகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. இருக்கும் தொழிலாளர்களில் சீனியர்கள் பலர் அலுவலக ரீதியான பணிகளுக்கு சென்று விடுகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் ஆதரவால் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனால் பஸ்களை இயக்க போதுமான ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது.

இந்நிலையில் மாநில அளவில் நிரந்தர பணி நியமனங்களை மேற்கொள்ள அரசு உத்தரவிட்ட நிலையில் பஸ்களை இயக்க அவுட்சோர்ஸிங் முறையிலும் 10 நாட்களாக பணிநியமனம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 16 டெப்போக்களில் 800க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் தேவை உள்ளது. நிரந்தர பணிநியமனம் மூலம் 200க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ள நிலையில், மீதியுள்ள 600 பேரை அவுட் சோர்ஸிங் மூலம் நியமிக்க உள்ளனர். இவர்கள் மாதம் 30 டூட்டி பார்க்க வேண்டும். தினசரி சம்பளம் ரூ.700 வீதம் வழங்கப்படும். ஒரு டெப்போவுக்கு 15 முதல் 20 பேர் வரை நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் நியமனத்தை தனியார் நிறுவனம் செய்கிறது. இந்நிறுவனத்திற்கு ஊழியர்கள் ரூ.20 ஆயிரம் டெபாசிட் வழங்க வேண்டும் என்கின்றனர்.தவிர ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் மூலமும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூல் நடக்கிறது.

நிரந்தர பணிவாய்ப்பு வரும்போது முன்னுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பலர் பணம் கொடுக்கின்றனர். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் காட்டில் 'அடை மழை' பொழிவதாக ஊழியர்கள் குமுறுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us