ADDED : ஜூன் 09, 2025 02:21 AM
மதுரை: பட்டாணி இறக்குமதிக்கான காலநீட்டிப்புக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் ஆஸ்திரேலியன் கஸ்பா பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து பட்டாணி இறக்குமதி செய்வதற்கு 2023 முதல் மத்திய அரசு அவ்வப்போது குறுகிய கால அனுமதி வழங்கியது. எங்கள் கோரிக்கையை ஏற்று தற்போது 2026 மார்ச் 31 வரை மீண்டும் காலநீட்டிப்பு செய்து மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதற்கு நன்றி.
மேலும் இறக்குமதி காலம் வரை வரி விதிக்காததும் வரவேற்கத்தக்கது. தமிழக, கேரள மக்கள் ஆஸ்திரேலியன் ரக கஸ்பா பட்டாணியை விரும்பி பயன்படுத்தினர். அதற்கு மட்டும் இன்னும் இறக்குமதி அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.