/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடு, சாக்கடை என எந்த வசதியும் இல்லை கண்ணீரில் கணபதி நகர் குடியிருப்போர் ரோடு, சாக்கடை என எந்த வசதியும் இல்லை கண்ணீரில் கணபதி நகர் குடியிருப்போர்
ரோடு, சாக்கடை என எந்த வசதியும் இல்லை கண்ணீரில் கணபதி நகர் குடியிருப்போர்
ரோடு, சாக்கடை என எந்த வசதியும் இல்லை கண்ணீரில் கணபதி நகர் குடியிருப்போர்
ரோடு, சாக்கடை என எந்த வசதியும் இல்லை கண்ணீரில் கணபதி நகர் குடியிருப்போர்

ரோடு வசதி
இங்கு முதன்மை தெருக்களில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன. அதிசயா நகரில் இருந்து கணபதி நகர் செல்லும் பகுதியில் ரோடு வசதி இல்லை. மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிடும். இதனால் பள்ளி குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர்.மழைக்காலம் தொடங்குவதற்குள் தார் ரோடு அமைக்க வேண்டும்.
பாதாள சாக்கடை
கணபதி நகரில் பாதாள சாக்கடை வசதி உள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் அவ்வசதி இல்லாததால் பல வீடுகள் கழிவுநீரை அருகில் உள்ள காலி மனைகளில் விடுகின்றனர். குளம் போல் தேங்குவதால் புதர் மண்டி,துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது.
லாரிகளால் சேதம்
இப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத கிடங்கு செயல்படுகிறது. அங்கு டிப்பர், டாரஸ் லாரிகளை நிறுத்துகின்றனர். அவை பாதாள சாக்கடை மூடிகள், ரோடுகளை சேதப்படுத்துகின்றன.
தெருநாய் தொல்லை
தெருநாய் தொல்லை அதிகம் உள்ளது. டூவீலரில் செல்வோரை துரத்திச் சென்று கடிக்கின்றன. அவற்றை மாநகராட்சியினர் பிடித்துச் செல்ல வேண்டும். கணபதி நகர் பஸ் ஸ்டாப் இருந்தும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நிற்பதில்லை. காதக்கிணறில் ரேஷன் கடை உள்ளது. கணபதி நகர், பாலாஜி நகர் பகுதிகளுக்கு சேர்த்து இங்கு ரேஷன் கடை அமைக்க வேண்டும்.