ADDED : செப் 09, 2025 04:24 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சொக்கையா சுவாமி ஜீவ சமாதியில் ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி விநாயகர், முருகன், சொக்கையா சுவாமிக்கு பால், இளநீர்,தயிர் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் கூட்டு வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாக தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.