ADDED : செப் 07, 2025 03:54 AM
மதுரை: மதுரை வில்லா புரத்தில் விஸ்வகர்மா நண்பர்கள் சந்திப்பு கூட்டம் ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் கதிரேசன் தலைமையில் நடந்தது.
மை மதுரை மாண்டிசோரி பள்ளி தாளாளர் கண்ணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அசோக் முன்னிலை வகித்தார்.
எம்.கே.டி., பேரவை மாநிலத் தலைவர் ஜம்பு கேஸ்வரன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், கல்வி அதிகாரி அண்ணாமலை, ஓய்வு பெற்றவர்களான வங்கி அதிகாரி பால கிருஷ்ணன், வணிகவரி அலுவலர் பொன்முடி, நில அளவை அதிகாரி விஜயன், த.வா.க., நிர்வாகி ராஜகோபால் உள்ளிட்டோர் பேசினர்.
ஆசிரியர் தவபாண்டி நன்றி கூறினார். அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும், சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, சேவை திட்டங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது.