ADDED : ஜூன் 29, 2025 12:30 AM
மதுரை: மத்திய அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் ஹேண்ட்பேக், லேப்டாப், லஞ்ச், ஸ்கூல், வாட்டர்கேன், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான சணல் பை தயாரிப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. அடிப்படை, அட்வான்ஸ்டு, டிசைனிங் பிரிவுகளில் பயிற்சி, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளவுஸ், சுடிதார், மேக்சி, பாவாடை, மிடி, நைட்டி தைக்க கற்றுத்தரப்படும்.
குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு சான்றிதழ், உத்யம் சான்றிதழ், கைவினை கலைஞருக்கான அடையாள அட்டை பெற்றுத்தரப்படும். ஆன்லைன் விற்பனை கற்றுத்தரப்படும். அலைபேசி: 89030 03090.