ADDED : மார் 19, 2025 04:09 AM
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் கீழசின்னணம்பட்டி கிராமத்தினருக்கு கொய்யா, பலா, நெல்லி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை தலைவர் மோகன், செயலாளர் தவசுமுத்து, பொருளாளர் ஜேசுராஜ், மணிசேகரன் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கண்ணன் பாபு, பார்த்திபன், முருகன், ஆறுமுகம், கருப்பையா ஆகியோர் 100 தென்னங்கன்றுகள் வழங்கினர். நல்லமணி குழுமத் தலைவர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேசன் செய்திருந்தார்.