/உள்ளூர் செய்திகள்/மதுரை/கற்பனை அதிகமுள்ள இடத்தில் ஆனந்தம் இருக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் பேச்சுகற்பனை அதிகமுள்ள இடத்தில் ஆனந்தம் இருக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் பேச்சு
கற்பனை அதிகமுள்ள இடத்தில் ஆனந்தம் இருக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் பேச்சு
கற்பனை அதிகமுள்ள இடத்தில் ஆனந்தம் இருக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் பேச்சு
கற்பனை அதிகமுள்ள இடத்தில் ஆனந்தம் இருக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் பேச்சு
ADDED : ஜன 04, 2024 02:39 AM

மதுரை: ''எங்கே கற்பனை அதிகமுள்ளதோ அங்கே ஆனந்தம் அதிகமாக இருக்கும்'' என, மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜத்தில் நடந்த 72ம் ஆண்டு இசைவிழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
இசை வித்தகர்கள் ரேவதி சங்கரன், தியாகராஜனுக்கு விருதும், விஸ்வநாதனுக்கு சான்றிதழும் வழங்கி ராமசுப்ரமணியன் பேசியதாவது:
கனவு, கற்பனையுடன் வாழ்கிறவர்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள். கவிஞர்களை உதாரணமாக சொல்லலாம். சத்குரு சங்கீத சமாஜம் குடும்பத்தினர் வாழையடி வாழையாக இசைக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டு வாழ்கின்றனர்.
சென்னை அளவுக்கு மதுரையில் இசைத்தமிழுக்கு முக்கியத்துவம் இல்லையென்று நினைத்ததுண்டு. ஆனால் இந்த சங்கீத சமாஜம் ஒன்றே அந்த குறையை ஈடுகட்டி விடும்.
நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதென தெரியாமல் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்கின்றனர். சிறுகுழந்தைகள் கூட முகம் வாடிப் போய் வாழ்வதை நாம் பார்க்கிறோம். மற்றவர்களிடம் இருந்து, வெளியில் இருந்து மகிழ்ச்சி வரவேண்டுமென நினைக்கிறோம். இருக்கும் இடத்தை மகிழ்ச்சிக்குரிய இடமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
விருது கொடுக்கும் நிறுவனம் இருக்கும் இடம் அருகில் செல்லக்கூட பயமாக உள்ளது. கொடுப்பதற்கு ஆளில்லை என்பதற்காக அந்த வீட்டு வாசலில் போகிறவர்களை அழைத்து விருது கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது.
அப்படி இல்லாமல் விருது கொடுக்கிற நிறுவனத்திற்கும் அதைப் பெறுகிறவர்களுக்கும் பெருமை இருக்க வேண்டும். அப்போது தான் விருதுக்கும் பெருமை இருக்கும் என்றார்.
சமாஜத் தலைவர் ேஷாபனா ராமச்சந்திரன், செயலாளர்கள் ராஜாராம், வெங்கடநாராயணன், பொருளாளர் சிவராமன் கலந்து கொண்டனர். மேலாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.