ADDED : மே 20, 2025 01:09 AM
மதுரை: பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய வரும் போது 2019 பிப். 1 க்கு முன், நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் இ சேவை மையங்கள் பதிவு செய்ய வேண்டும்.
மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: மே இறுதி வரை பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம். மாவட்டத்தில் உழவர் ஊக்கத்தொகை பெறும் 13 ஆயிரத்து 2 விவசாயிகள் பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெறவில்லை. 3722 பேர் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமலும் 2912 பேர் கைரேகை பதிவு செய்யாமலும் உள்ளனர். முழுமையாக பதிந்தால் மட்டுமே அடுத்தடுத்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.