/உள்ளூர் செய்திகள்/மதுரை/குழந்தைகளுக்கு 'ராமு' கொள்ளை பாசக்காரன் களத்திலோ வீரரை தெறிக்கவிடும் ரோசக்காரன்குழந்தைகளுக்கு 'ராமு' கொள்ளை பாசக்காரன் களத்திலோ வீரரை தெறிக்கவிடும் ரோசக்காரன்
குழந்தைகளுக்கு 'ராமு' கொள்ளை பாசக்காரன் களத்திலோ வீரரை தெறிக்கவிடும் ரோசக்காரன்
குழந்தைகளுக்கு 'ராமு' கொள்ளை பாசக்காரன் களத்திலோ வீரரை தெறிக்கவிடும் ரோசக்காரன்
குழந்தைகளுக்கு 'ராமு' கொள்ளை பாசக்காரன் களத்திலோ வீரரை தெறிக்கவிடும் ரோசக்காரன்
ADDED : ஜன 08, 2024 05:42 AM

அலங்காநல்லுார் : களத்தில் திமிலை பிடித்து அடக்க நினைக்கும் காளையரைப் பறக்கவிட்டு திமிர் காட்டும் ஜல்லிக்கட்டு காளை ராமு வீட்டில் மழலைகளின் அன்பிற்கு அடிமையாக காட்சியளிக்கிறான்.
ஜல்லிக்கட்டு, வட மஞ்சு விரட்டு போட்டிகளில் காளைகளின் திமிலை பிடித்து அடக்கும் வீரனிடம் பிடிபடாத காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றன.
அலங்காநல்லுார் அருகே தண்டலை செவக்காடு விவசாய சகோதரர்கள் மகேந்திரன், சுரேந்திரன் ஆகியோர் வீட்டில் 4 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர்.
தற்போது 8 ஆண்டுகளாக வளர்ந்து வரும் ராமு, 6 ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் களம் கண்டு பிடிபடாத வீரக்காளையாக அவர்களது குடும்பத்திற்கு பெருமை சேர்த்து வருகிறான்.
காளை பராமரிக்கும் மீனாட்சி கூறியதாவது : கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் வீட்டு பிள்ளைகள் க்ரிஷிகா 7, கிருஷ்ணமூர்த்தி 9, திருப்பதி 11, பிரேம் 12, இவர்கள்தான் காளையை அவிழ்த்துச் செல்கின்றனர்.
ஜல்லிக்கட்டுக்காக தற்போது காளைக்கு நீச்சல், மண் குத்துதல், நடைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி நேரம் போக காளைகளை பராமரிப்பது எங்கள் பிள்ளைகள்தான்.
வாடிவாசலில் அவிழ்த்துவிட்டால் ராமு போக்கு மாடுதான். அதேசமயம் யாராவது அவனை சீண்டி திமிலை தொட நினைத்தால், திரும்பி நின்று சுற்றி சுழன்று அவர்களை தெறிக்கவிடுவான். காளை தான் எங்கள் குல தெய்வம். ஆண்டுதோறும் முதல் போட்டியை அலங்கநல்லுாரில் தான் துவக்குவோம். நாங்கள் வளர்த்த காளை அப்புவின் வாரிசை எடுத்து கருப்பு என அடுத்தாண்டு போட்டிக்கு தயார் செய்து வருகிறோம், என்றார்.