Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மேம்பால பணிக்கு நிலம் எடுப்பு இழப்பீடு வழங்க இறுதி விசாரணை டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிரம்

மதுரை மேம்பால பணிக்கு நிலம் எடுப்பு இழப்பீடு வழங்க இறுதி விசாரணை டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிரம்

மதுரை மேம்பால பணிக்கு நிலம் எடுப்பு இழப்பீடு வழங்க இறுதி விசாரணை டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிரம்

மதுரை மேம்பால பணிக்கு நிலம் எடுப்பு இழப்பீடு வழங்க இறுதி விசாரணை டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிரம்

ADDED : ஜூன் 12, 2025 02:21 AM


Google News
மதுரை: மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்புகளில் மேம்பாலப் பணிகள் 65 சதவீதம் முடிந்த நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது. பாலங்களுக்கு கீழ் சர்வீஸ் ரோடுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளன.

கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடி மதிப்பில் 3.5 கி.மீ., தொலைவுக்கு இருபிரிவுகளாக அமையும் பாலத்தின் கீழ்ப்பகுதியில் மேற்கு, கிழக்கு பக்கங்களில் சர்வீஸ் ரோடு அமைய உள்ளது. இதற்கு அருகில் உள்ள கட்டடங்கள் தேவைப்படுகின்றன.

இவற்றை கையகப்படுத்தி, தற்போது இழப்பீடு வழங்குவதற்கான கூட்டம் சமீபத்தில் நிலஎடுப்பு டி.ஆர்.ஓ., வீராச்சாமி தலைமையில் நடந்தது. நிலஎடுப்புக்காக ரூ.164 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படுவதால், வழிகாட்டி மதிப்பீடைவிட இரண்டேகால் மடங்கு கூடுதலாக வழங்கப்பட உள்ளது.

இதேபோல மேலமடை பாலப்பணியில் பாலத்திற்கு மேற்கே ஆவின் முதல் அண்ணா பஸ்ஸ்டாண்ட் சந்திப்பு வரை 400 மீட்டருக்கு ரோடு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் மேலமடை, ஆவின் சந்திப்பு, அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே என 3 ரவுண்டானாக்கள் அமைய உள்ளன. இந்த ரோடுக்காகவும் 2050 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜூன் 26 ல் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி விசாரணை நடக்க உள்ளது. அதன்பின் அரசு ஒப்புதல் பெற்று இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''அமைச்சர், அதிகாரிகள் உத்தரவுகளால் நிலஎடுப்பு பணிகள் முடிந்துவிட்டன. அதற்கான இழப்பீடை வருவாய்த் துறையினர் வழங்க உள்ளனர். இதனால் பணிகள் தீவிரமெடுத்து, டிசம்பருக்குள் பணி முடிந்து பாலம் பயன்பாட்டுக்கு வந்துவிடும்'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us