/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விடுபட்ட இடங்களை நிரப்புக: பெரியாறு கூட்டுகுடிநீர் திட்ட வீட்டு இணைப்புகள்: மாநகராட்சி பகுதியில் இன்னும் 'பெண்டிங்' 1 லட்சம் விடுபட்ட இடங்களை நிரப்புக: பெரியாறு கூட்டுகுடிநீர் திட்ட வீட்டு இணைப்புகள்: மாநகராட்சி பகுதியில் இன்னும் 'பெண்டிங்' 1 லட்சம்
விடுபட்ட இடங்களை நிரப்புக: பெரியாறு கூட்டுகுடிநீர் திட்ட வீட்டு இணைப்புகள்: மாநகராட்சி பகுதியில் இன்னும் 'பெண்டிங்' 1 லட்சம்
விடுபட்ட இடங்களை நிரப்புக: பெரியாறு கூட்டுகுடிநீர் திட்ட வீட்டு இணைப்புகள்: மாநகராட்சி பகுதியில் இன்னும் 'பெண்டிங்' 1 லட்சம்
விடுபட்ட இடங்களை நிரப்புக: பெரியாறு கூட்டுகுடிநீர் திட்ட வீட்டு இணைப்புகள்: மாநகராட்சி பகுதியில் இன்னும் 'பெண்டிங்' 1 லட்சம்
ADDED : ஜூன் 16, 2025 12:19 AM

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இன்னும் இணைப்பு கொடுக்காத வீடுகளுக்கு எப்போது கொடுக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது.
மாநகராட்சியில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் குடிநீர் தேவைக்காக அம்ரூத் திட்டத்தில் ரூ.1653 கோடியில் பெரியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.
இதற்காக முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ., நீளத்திற்கு குடிநீர் பிரதான குழாய் பதித்தல், அங்கிருந்து மதுரை நகர் வரை 54.44 கி.மீ., நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்து 37 மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள இரண்டரை லட்சம் இணைப்புகளில், 60 வார்டுகளில் 1.60 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு சோதனை அடிப்படையில் தற்போது வீடுகளுக்கே குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின்படி ஐந்தாம் கட்ட பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்ற அவகாசம் உள்ள நிலையில், தற்போது 60 வார்டுகளில் முடிக்கப்பட்டுள்ள இணைப்பு பணிகளில், வார்டு 87 அனுப்பானடி ஹவுசிங்போர்டு ரேணுகா அம்மன் கோயில் தெரு உட்பட நகரின் பல இடங்களில் இணைப்பு வழங்காமல் விடுபட்டுள்ளது.
இதனால் அருகருகே உள்ள ஒரு வீட்டிற்கு இணைப்பும், மற்றொரு வீட்டிற்கு இணைப்பு இன்றியும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பெரும்பாலான பகுதிகளில் புதிய ரோடுகள் அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பாதாளச் சாக்கடை, ரோடு பராமரிப்பு, பெரியாறு குடிநீர் குழாய் பதிப்பு, இணைப்பு என ஒரே நேரத்தில் பணிகள் துவங்கியதால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்தனர். குடிநீர் திட்டம் இணைப்பு வரை புதிய ரோடுகள் அமைப்பதில்லை என மாநகராட்சி முடிவு எடுத்தது.
தற்போது 60 வார்டுகளில் 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. குழாய் இணைக்க பெரும்பாலான ரோடுகளின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் முறைப்படி மூடப்படவில்லை. வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதற்கிடையே 60 வார்டுகளிலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் இணைப்பு பணி விடுபட்டுள்ளது. விடுபட்ட பகுதிகள் ஐந்தாம்கட்ட பணிகளில் (டிசம்பரில் வரை) இணைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்த நிலையில், தற்போது புதிய ரோடுகள் அமைக்கும் பணிகள் பல்வேறு பகுதிகளில் துவங்கியுள்ளது.
டிசம்பருக்குள் புதிய ரோடுகள் அமைக்கப்படும். அதன் பின் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கினால் மீண்டும் புதிய ரோடுகளில் பள்ளம் தோண்டப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இத்திட்டம் ஆரம்பத்தில் இருந்தே 'இடியாப்ப' குழப்பத்தில் நடக்கிறது. எது எப்படியோ குடிநீர் வினியோகம் சீராக இருந்தால் நல்லது என்றனர்.