ADDED : ஜூன் 12, 2025 02:10 AM
கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டி மந்தையில் உயர் மின் கோபுர விளக்கு எரியாமல் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''இருட்டை பயன்படுத்தி சிலர் கால்நடைகளை திருடிச் செல்கின்றனர். இரவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றனர்.