ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன்நகர் லோடுமேன் விக்னேஷ் 24.
இவரது மனைவி நாகசக்தி 21. மகன் கிஷாந்த் 2, எட்டு மாத பெண் குழந்தை மிதன்யா ஸ்ரீ.மது போதையில் விக்னேஷ் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததால் 3 நாட்களுக்கு முன் நாகசக்தி குழந்தைகளுடன் சனீஸ்வரன் கோயில் அருகே உள்ள பாட்டி காளியம்மாள் வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று மாலை மதுபோதையில் சென்ற விக்னேஷ் மனைவியுடன் தகராறு செய்தார். மிதன்யா ஸ்ரீயை பறித்து ரோட்டில் வீசியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சோழவந்தான் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தது. விக்னேைஷ போலீசார் கைது செய்தனர்.