Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குறைகளை கொட்டித்தீர்த்த விவசாயிகள்

குறைகளை கொட்டித்தீர்த்த விவசாயிகள்

குறைகளை கொட்டித்தீர்த்த விவசாயிகள்

குறைகளை கொட்டித்தீர்த்த விவசாயிகள்

ADDED : மே 15, 2025 02:10 AM


Google News
திருமங்கலம்; திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்தது.

அலப்பலச்சேரி விவசாயிகள் கூறியதாவது: கிராமத்து கண்மாயில் உள்ள மூன்று மலைகளும் சேதம் அடைந்துள்ளன. இதனால் கண்மாய்க்கு வரும் அனைத்து தண்ணீரும் நிற்காமல் வெளியேறி வீணாகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்றனர். கண்மாய்களை சீரமைப்பதற்கான குடிமராமத்து திட்ட பணிகளுக்கான நிதி வரவில்லை. நிதி வந்தவுடன் கண்மாய்களில் உள்ள மதகுகள் சீரமைக்கப்படும் என்றனர்.

கள்ளிக்குடி பகுதியில் கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று ரோடு அமைப்பதற்கு தனியார் பயன்பாட்டிற்கும் கிராவல் மண் அள்ளப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும், கண்மாய்களில் வண்டல் மண் மட்டுமே அள்ளுவதற்கு உத்தரவிட கோரியும் மண் அள்ளிய பகுதிகளில் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தங்களாச்சேரி கிராமத்தில் சேதமடைந்து உள்ள பொதுப்பணித் துறை கட்டடத்தை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் ஒவ்வொரு கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தியும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

வாடிப்பட்டி


வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை உதவி இயக்குனர் தாமரைசெல்வி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கவுதம் முன்னிலை வகித்தனர். ஆர்.ஐ., ராஜா வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணவேணி, வள்ளி மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கட்டக்குளம், தனிச்சியம், தாதம்பட்டி அய்யனார் கோயில் உள்ளிட்ட கண்மாய்களில் தண்ணீர் இல்லாத கோடை காலத்திலேயே சீமை கருவேல மரங்களை அகற்றி துார்வார வேண்டும், கொண்டையம்பட்டி, பெருமாள்பட்டி இடையே தார் ரோடு அமைத்தல், திருவாலவாயநல்லுாரில் சாலை ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us