ADDED : பிப் 25, 2024 04:09 AM
மேலுார், : மேலுாரில் அனைத்து துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழய்யா தலைமையில் நடந்தது.
செயலாளர் துரைபாண்டியன், பொருளாளர் ஆதிசிவன் நிதி நிலை அறிக்கை வாசித்தனர். செயல் தலைவர் மணி சங்கத்தின் செயல்பாடு, வளர்ச்சி குறித்து பேசினார். 70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்ககோரி அனைத்து ஓய்வூதிய சங்கத்தினரை ஒருங்கிணைத்து போராட வேண்டும். உதவி கல்வி அலுவலகத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதியங்களுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் மார்ச் 20ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் துரைபாண்டியன், சிதம்பரம், வீரணன், சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.