/உள்ளூர் செய்திகள்/மதுரை/கனமழையிலும் நிரம்பாத மானாவாரி கண்மாய்கள் விரக்தியில் குன்றத்து விவசாயிகள்கனமழையிலும் நிரம்பாத மானாவாரி கண்மாய்கள் விரக்தியில் குன்றத்து விவசாயிகள்
கனமழையிலும் நிரம்பாத மானாவாரி கண்மாய்கள் விரக்தியில் குன்றத்து விவசாயிகள்
கனமழையிலும் நிரம்பாத மானாவாரி கண்மாய்கள் விரக்தியில் குன்றத்து விவசாயிகள்
கனமழையிலும் நிரம்பாத மானாவாரி கண்மாய்கள் விரக்தியில் குன்றத்து விவசாயிகள்
ADDED : ஜன 08, 2024 05:18 AM

திருப்பரங்குன்றம் : சமீபத்தில் தொடர்ந்து பெய்த மழையிலும் திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வேடர்புளியங்குளம் தோப்பூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. கனமழை பெய்தால் மட்டுமே இக்கண்மாய்கள் நிரம்பும். வைகை அணை தண்ணீர் வருவதற்கும் வழி இல்லை.
இக்கண்மாய்களின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மாதம் பெய்த தொடர் மழையிலும் கண்மாய்கள் நிரம்பவில்லை.
தென்பழஞ்சி விவசாயிகள் பாண்டியன், சிவராமன் கூறியதாவது: தென்பழஞ்சி கண்மாய் 2010ல் நிரம்பியது. அதன் பின் தொடர் மழை பெய்தும் கண்மாய்க்குள் பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கண்மாய்களுக்கு மழை நீர் வரும் கால்வாய்கள், ஒடைகள், கண்மாயிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் கண்மாய் நிரம்பவில்லை. கண்மாய் தண்ணீரை விவசாயத்திற்கு நேரடியாக பயன்படுத்த முடியவில்லை.
மானாவாரி பகுதிகளில் ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மட்டும் சாகுபடி செய்கிறோம். கண்மாய் தண்ணீரை நம்பியுள்ளவர்கள் 3 ஆண்டுகளாக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நீர் வரத்து கால்வாய், ஓடைகளை தூர்வாரி மழை நீர்வர ஏற்பாடு செய்ய வேண்டும். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.