ADDED : செப் 10, 2025 08:07 AM
மதுரை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி செப். 25 காலை 10:15 மணிக்கு நடக்க உள்ளது.
இன்றைய சூழலில் உலக அமைதிக்கான காந்திய அணுகுமுறை என்ற தலைப்பில் எழுத வேண்டும். பதிவுக் கட்டணம் இல்லை. மாணவர் என்பதற்கான சான்றிதழ், காகிதம், பேனாவுடன் வரவேண்டும். பங்கேற்க விரும்புவோர் கல்வி அலுவலர் நடராஜனை 86100 94881ல் தொடர்பு கொள்ளலாம்.