Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எர்ணாகுளம் - மதுரை இன்று சிறப்பு ரயில்: மெத்தனமாக நேற்று அறிவிப்பு

எர்ணாகுளம் - மதுரை இன்று சிறப்பு ரயில்: மெத்தனமாக நேற்று அறிவிப்பு

எர்ணாகுளம் - மதுரை இன்று சிறப்பு ரயில்: மெத்தனமாக நேற்று அறிவிப்பு

எர்ணாகுளம் - மதுரை இன்று சிறப்பு ரயில்: மெத்தனமாக நேற்று அறிவிப்பு

ADDED : ஜூன் 22, 2025 03:42 AM


Google News
மதுரை: கேரள மாநிலம் எர்ணாகுளம் - மதுரை இடையே ஒருவழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று (ஜூன் 22) மதியம் 3:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06165), நாளை அதிகாலை 2:30 மணிக்கு மதுரை வரும்.

இந்த ரயில் கோட்டயம், காயங்குளம், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

ஒரு ஏ.சி., சேர் கார் பெட்டி, 16 சேர் கார் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கியது.

ரயில்வேயின் மெத்தனம்


இன்று எர்ணாகுளத்தில் புறப்படும் ரயிலுக்கு, நேற்று மாலையில் தான் அறிவிப்பு வெளியானது. இதனால் முன்பதிவு செய்பவர்கள் சிரமப்படுவர். ஒரு வழி மட்டும் சிறப்பு ரயில் விடுவதற்கு பதிலாக, இருவழி ரயிலாக ஒருவாரத்திற்கு முன்பே அறிவித்திருந்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். அதிகாலை வந்து சேரும் ரயிலுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்காமல், 16 சேர் கார் பெட்டிகள் இணைப்பதால் பயணிகளுக்கு என்ன பயன் என்பதை ரயில்வே புரிந்து கொள்ள வேண்டும்.

மதுரைக்கும், கேரளாவின் கோட்டயம், கொச்சிக்கும் வர்த்தக, கல்வி தொடர்புகள் அதிகம் உண்டு. எனவே மெத்தனமாக, முதல் நாள் சிறப்பு ரயில் அறிவிப்பதற்கு பதிலாக, இந்த வழித்தடத்தில் நிரந்தரமாக ரயில் விடலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us