/உள்ளூர் செய்திகள்/மதுரை/ படிப்புக்கேற்ற வேலை இன்றி இன்ஜி., பட்டதாரி தற்கொலை படிப்புக்கேற்ற வேலை இன்றி இன்ஜி., பட்டதாரி தற்கொலை
படிப்புக்கேற்ற வேலை இன்றி இன்ஜி., பட்டதாரி தற்கொலை
படிப்புக்கேற்ற வேலை இன்றி இன்ஜி., பட்டதாரி தற்கொலை
படிப்புக்கேற்ற வேலை இன்றி இன்ஜி., பட்டதாரி தற்கொலை
ADDED : ஜூன் 21, 2025 08:58 PM
மதுரை:மதுரை பைபாஸ் ரோடு, துரைசாமி நகரைச் சேர்ந்தவர் சுபராஜன், 65; ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர். இவரது மனைவி தேன்மொழி; ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநர். இவர்களின் மகள் சென்னையில் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
மகன் அமர்த்தியராஜ், 26, பி.இ., மெக்கானிக் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். ஒரு மாதத்திற்கு முன் மதுரை திரும்பியவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
'நல்ல வேலை கிடைக்கவில்லை; படிப்பிற்கேற்ற சம்பளமும் கிடைக்கவில்லை' என பெற்றோரிடம் கூறினார். நாளடைவில் தாழ்வு மனப்பான்மையால் மன அழுத்தத்திற்கு உள்ளானார். இதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கை மணிக்கட்டை கூரிய ஆயுதத்தால் அறுத்து, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்., காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.