ADDED : ஜூன் 28, 2025 12:20 AM
மதுரை: மதுரை நகர் மின்பகிர்மான வட்டம் மேற்கு கோட்டத்தில் பழங்காநத்தம் பிரிவுக்கு உட்பட்ட 004 - டி சோன் (2455 இணைப்புகள்) மற்றும் 005 இ சோன் (1961 இணைப்புகள்) ஆகிய அனைத்தும் இரட்டைப்படை மாதத்தில் (6 வது மாதம் ஜூன்) கணக்கீடு செய்யப்பட்டு வந்தன.
இனிவரும் காலங்களில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒற்றைப்படை மாதத்தில் (7 வது மாதம் ஜூலை முதல்) அவை கணக்கீடு செய்யப்பட உள்ளன என்று செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.