ADDED : ஜூலை 02, 2025 08:08 AM
பேரையூர்; பேரையூர் பகுதியில் ரோட்டோரம் குவிந்துள்ள புழுதி காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக காற்று வீசுகிறது. ஆடி துவங்கும் முன்பே காற்று வீசி வருகிறது. காற்று வீசும் போது கிளம்பும் புழுதி மண்டலத்தால் பாதசாரிகள், டூவீலர்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக ரோட்டின் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும்.
இல்லாவிடில் அவற்றில் வாகனங்கள் சிக்கி விபத்து நடக்கவும் வாய்ப்பாக அமையும்.