/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்கள் படும் துயரம், வேதனையை தி.மு.க., அரசு மறைக்க முடியாது டாக்டர் சரவணன் சொல்கிறார் மக்கள் படும் துயரம், வேதனையை தி.மு.க., அரசு மறைக்க முடியாது டாக்டர் சரவணன் சொல்கிறார்
மக்கள் படும் துயரம், வேதனையை தி.மு.க., அரசு மறைக்க முடியாது டாக்டர் சரவணன் சொல்கிறார்
மக்கள் படும் துயரம், வேதனையை தி.மு.க., அரசு மறைக்க முடியாது டாக்டர் சரவணன் சொல்கிறார்
மக்கள் படும் துயரம், வேதனையை தி.மு.க., அரசு மறைக்க முடியாது டாக்டர் சரவணன் சொல்கிறார்
ADDED : ஜூன் 04, 2025 01:25 AM
மதுரை: ''வானத்தை போர்வையால் மறைக்க முடியாது. அதுபோல தி.மு.க., ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள், வேதனைகளை மறைக்க முடியாது'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: மதுரையில் தி.மு.க., நடத்திய பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றினர். இதில் கச்சத்தீவு மீட்போம் என்கின்றனர். அந்த தீவை தாரை வார்த்தது தி.மு.க.,தான். மத்திய அரசில் 17 ஆண்டுகள் தி.மு.க., அங்கம் வகித்தது. அப்போதுதான் கல்வி மத்திய அரசு பட்டியலில் சென்றது. தற்போது மாநில பட்டியலுக்கு கொண்டுவர தீர்மானம் போட்டது வேடிக்கையானது. அதேபோல் உதயநிதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 'நீட்' தேர்வை ரத்து செய்வோம். அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும்' என்றுக்கூறி எதையும் செய்யாமல் 23 உயிர்கள் பலியாக காரணமாக இருந்ததற்காகவா.
தமிழகத்தில் நடக்கும் அவலங்களை, மக்கள் விரோத செயல்களை எல்லாம் எப்படி வானத்தை போர்வையால் மறைக்க முடியாதோ அதே போல விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் எடுபடாது.
மதுரையில் ஸ்டாலின் நடத்திய 'ரோடு ஷோ'வுக்கு மக்கள் யாரும் வரவில்லை. கூலிக்கு ஆள் பிடித்துதான் வந்தார்கள். ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்துவது போல, மக்கள் இல்லாத சாலைகளில் 'ரோடு ஷோ' நடத்தியது காமெடியாக இருந்ததாக மக்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு கூறினார்.