/உள்ளூர் செய்திகள்/மதுரை/'சோதிக்காதீங்கய்யா...' : சோதனை தடம் இல்லாமல் அவதி : ஆர்.டி.ஓ., அலுவலகத்தால் நெரிசல்'சோதிக்காதீங்கய்யா...' : சோதனை தடம் இல்லாமல் அவதி : ஆர்.டி.ஓ., அலுவலகத்தால் நெரிசல்
'சோதிக்காதீங்கய்யா...' : சோதனை தடம் இல்லாமல் அவதி : ஆர்.டி.ஓ., அலுவலகத்தால் நெரிசல்
'சோதிக்காதீங்கய்யா...' : சோதனை தடம் இல்லாமல் அவதி : ஆர்.டி.ஓ., அலுவலகத்தால் நெரிசல்
'சோதிக்காதீங்கய்யா...' : சோதனை தடம் இல்லாமல் அவதி : ஆர்.டி.ஓ., அலுவலகத்தால் நெரிசல்
ADDED : ஜூன் 06, 2025 02:49 AM

மதுரை: மதுரையில் வாடகை கட்டடத்தில் செயல்படும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் (ஆர்.டி.ஓ.,) மேலுார் ரோட்டில் தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது.
மதுரையில் தெற்கு, வடக்கு, மத்தி என 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் தினமும் சராசரியாக 100 முதல் 150 வாகனங்கள் வரை பதிவு, தகுதிச்சான்று உட்பட பல்வேறு காரணங்களுக்காக வருகின்றன. மதுரை வடக்கு, தெற்கு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் உள்ளது. வாகனங்களை நிறுத்தவும் இடவசதி, சோதனை தடம் (டெஸ்ட் டிராக்) போன்றவை உள்ளது. ஆனால் மத்திய அலுவலகம் மட்டும் பத்தாண்டுகளுக்கும் மேலாக துவங்கியது முதல் மதுரை விரைவு போக்குவரத்துக்கழக அலுவலகத்தின் ஒருபகுதியில் வாடகைக்கு இயங்கி வருகிறது.
வாகனங்களை நிறுத்தவும், சோதனை செய்யவும் போதுமானதாக இல்லை. இதனால் ரேஸ்கோர்ஸ் அருகே பல ஆண்டுகளாக நிறுத்தி பதிவு, சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு இடவசதி போதாமையால், அலுவலகம் அருகே சென்னை செல்லும் ரோட்டில் நிறுத்தி பதிவு செய்யப்படுகின்றன. ஏற்கனவே இந்த ரோட்டில் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட், சென்ட்ரல் மார்க்கெட், வேளாண் வணிக வளாகம், பூ, பழம் மார்க்கெட் என வாகன போக்குவரத்து 'பிஸி'யாக உள்ளது.
இந்நிலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் வரும் வாகனங்கள் ரோட்டில் வெள்ளைக் கோட்டை தாண்டி நிற்பதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை ஆய்வு செய்ய ஒரே ஒரு ஆய்வாளரே உள்ளார். அவரும் அலுவலக பணிமுடிந்து வாகனங்களை பார்வையிட காலை 11:00 மணியை தாண்டித்தான் வரும் சூழல் உள்ளது. இதனால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதற்கு மத்திய அலுவலகத்தை இடமாற்றினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
ஆர்.டி.ஓ., பாலமுருகனிடம் கேட்டபோது, ''அலுவலகத்திற்கு நீண்ட காலமாக இடம் தேர்வு நடக்கிறது. பொருத்தமான இடம் கிடைத்ததும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்'' என்றார்.