Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களை பதிவு செய்யும்போது முறையா பண்ணுங்கப்பு! கம்ப்யூட்டர் பதிவில் தவறாக பதிவிடுவதால் தாமதமாக வாய்ப்பு

மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களை பதிவு செய்யும்போது முறையா பண்ணுங்கப்பு! கம்ப்யூட்டர் பதிவில் தவறாக பதிவிடுவதால் தாமதமாக வாய்ப்பு

மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களை பதிவு செய்யும்போது முறையா பண்ணுங்கப்பு! கம்ப்யூட்டர் பதிவில் தவறாக பதிவிடுவதால் தாமதமாக வாய்ப்பு

மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களை பதிவு செய்யும்போது முறையா பண்ணுங்கப்பு! கம்ப்யூட்டர் பதிவில் தவறாக பதிவிடுவதால் தாமதமாக வாய்ப்பு

ADDED : ஜூலை 29, 2024 07:03 AM


Google News
Latest Tamil News
மதுரை, ஜூலை 29- 'மக்களுடன் முதல்வர்' மனுக்கள் பெறும் முகாம்களில் முக்கியத்துவம் இல்லாத வகையில் மனுக்களைபதிவு செய்வதால் பலன்கள் கிடைப்பது தாமதமாகும் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழக அரசு சார்பில் 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் முகாமிட்டு நாள் முழுவதும் மனுக்களை பெறுவர். முடிந்தளவு விரைவாக மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வர். இம்முகாம்கள் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி என நகர்ப்புறங்களில் தேர்தலுக்கு முன் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின் தற்போது கிராமப்புறங்களில் நடக்கிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 5 முதல் 10 கிராமங்களுக்கு ஒரு முகாம்கள் நடைபெறும். மதுரை மாவட்ட ஊரகப் பகுதியில் 73 முகாம்கள் நடத்த திட்டமிட்டு அதன்படி நடந்து வருகிறது.

இங்கு வரும் மக்களிடம் மனுக்களை பெற்று அவை எந்தெந்த துறைக்குரிது என பிரித்து அனுப்புவதற்கென 5 ஊழியர்கள் இருப்பர். அவர்கள் துறைவாரியாக குறிப்பிட்டு தரும் மனுக்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்ய 5 ஊழியர்கள் வரை உள்ளனர். அவர்கள் மனுக்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்புவர்.

இவ்வாறு வரும் மனுக்களை 'மக்களுடன் முதல்வர்' என்பதை குறிக்கும் வகையில்'எம்.எம்.,' என்றும் 'மக்களுடன் முதல்வர் முகாம்' என்பதை குறிக்கும் வகையில் 'எம்.எம்.சி.,' என்றும் இருவகையில் பதிவு செய்வர். இவற்றில் 'எம்.எம்.' மனுக்கள் தீவிர நடவடிக்கைக்கு உட்பட்டவை. இம்மனுக்களுக்கு விரைவாக தீர்வு கண்டு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும். அவை மாதந்தோறும் முதல்வர் அளவுக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

இதேபோல எம்.எம்.சி., மனுக்களும் தீர்வு காணக்கூடியவையே என்றாலும் அதன்மீது தீவிரம் காட்டுவதில்லை. எந்தெந்த துறையில் என்னென்ன குறைபாடுகளுக்கு மனுசெய்யலாம் என்பது குறித்து அங்கு விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும்.

இதுபற்றிய விவரம் மக்களுக்கு தெரியாது என்பதால், ஊழியர்கள் 90 சதவீத மனுக்களை 'முகாம்' மனுக்கள் எனும்வகையில், 'எம்.எம்.சி.,' என்றே குறிப்பிடுகின்றனர். இதனால் பல மனுக்கள் கிடப்பில் போடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் பல முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகத்தில் நலிந்த பிரிவினர் உதவித்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முறையாக மனுக்களை பதிவு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us