Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாற்றுத்திறனாளிகள் மறியல்: 150 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 150 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 150 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 150 பேர் கைது

ADDED : செப் 03, 2025 06:00 AM


Google News
மதுரை: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.

மதுரை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாரதி, மாவட்ட குழுஉறுப்பினர்கள் ராஜேந்திரன், அழகுசாந்தி முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் குமரவேல், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மணிகண்டன், உதவித் தலைவர்கள் மாரியப்பன், செல்லம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணை பெற்ற உடனே மாத உதவித்தொகை வழங்க வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில் ஊனத்தின் அளவை குறைத்து மதிப்பிடுவதும், நிரந்தர ஊனத்தை தற்காலிக ஊனம் என்று பதிவிடுவது என அலட்சியம், அவமானப்படுத்துவதை கண்டிப்பது, மாநகராட்சி பகுதியில் சிறப்பு பள்ளிகள் நடத்த வேண்டும், மாநகராட்சி கடைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கேரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்காக கலெக்டர் அலுவலகம் முன் திரண்டவர்கள் பஸ்மறியல் செய்ய ரோட்டில் அமர்ந்தனர். போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் முடிவு ஏற்படவில்லை. எனவே அவர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட உதவித் தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us