ADDED : ஜன 14, 2024 04:09 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி - திருமங்கலம் ரோட்டில் ஏ.ராமநாதபுரம் புத்துார் மலையடிவாரத்தில் ராமர் கோயில் விளக்கு ஸ்தம்பம் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
கோயில் அருகில் உள்ள பகுதி செம்பட்டி, வடுகபட்டி ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியாக வருவதால் சாக்கடை கழிவுநீரை முறையாக அகற்றாமல் உள்ளனர். இதை கண்டித்து கோயில் வழிபாட்டுக்கு வந்த மக்கள் நேற்று காலை 15 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.


