Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பத்திரப்பதிவுக்கான சர்வர் பாதிப்பு

பத்திரப்பதிவுக்கான சர்வர் பாதிப்பு

பத்திரப்பதிவுக்கான சர்வர் பாதிப்பு

பத்திரப்பதிவுக்கான சர்வர் பாதிப்பு

ADDED : மே 27, 2025 01:09 AM


Google News
மதுரை: மதுரை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் சர்வர் பாதிப்பால் நேற்று காலை பதிவு செய்யும் பணி பாதிக்கப்பட்டது. பதிவு செய்ய வந்தவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதள இணைப்பு கிடைப்பதில் பிரச்னை இல்லை. தினமும் காலை 10:00 மணிக்கு 'மந்திரா டிவைஸ்' மூலம் சார்பதிவாளர்கள் 'பையோமெட்ரிக்' முறையில் கைரேகையை பதிவு செய்து பணியை துவக்குவர். அந்த டிவைஸில் பத்திரம் பதிவு செய்ய வருவோரின் கைரேகையை ஆதாருடன் சரிபார்த்து, ரேகை பதிவு செய்யப்படும்.

நேற்று காலை 10:00 மணிக்கு மாநிலம் முழுவதும் 'மந்திரா டிவைஸ்,'சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சென்னை தலைமை அலுவலகத்தில் முறையிட்டோம். மதியம் 12:30 மணிக்கு சரிசெய்யப்பட்டது. வழக்கம்போல் பத்திரப் பதிவு நடந்தது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us