/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டவுன்ஹால் ரோடு தெப்பத்தை பழமை மாறாமல் பாதுகாக்க முடிவு; பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படுகிறது டவுன்ஹால் ரோடு தெப்பத்தை பழமை மாறாமல் பாதுகாக்க முடிவு; பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படுகிறது
டவுன்ஹால் ரோடு தெப்பத்தை பழமை மாறாமல் பாதுகாக்க முடிவு; பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படுகிறது
டவுன்ஹால் ரோடு தெப்பத்தை பழமை மாறாமல் பாதுகாக்க முடிவு; பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படுகிறது
டவுன்ஹால் ரோடு தெப்பத்தை பழமை மாறாமல் பாதுகாக்க முடிவு; பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படுகிறது
ADDED : மார் 28, 2025 05:14 AM

மதுரை : மதுரை டவுன்ஹால் ரோட்டில் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகளை அகற்றி, பழமை மாறாமல் பாதுகாக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட உள்ளது.
இத்தெப்பக்குளத்தைச் சுற்றி எலக்ட்ரானிக்ஸ் விற்பனை, சர்வீஸ் செய்யும் கடைகள் உள்ளன. குளத்தின் நடுவே உள்ள கலைநயமிக்க நீராழி மண்டபம் கடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி கடைகள், விடுதிகளின் கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாற்றப்பட்டது.
எனவே தெப்பக்குளத்தை பாதுகாக்கும் வகையில் 100 கடைகளை காலிசெய்யுமாறு அறநிலையத்துறை நோட்டீஸ் கொடுத்தது. உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். மேல்முறையீடு வழக்குகளில் அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் கடைகளை காலி செய்ய வரும் மார்ச் 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு, கடைகளை முழுமையாக அகற்ற அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதா அல்லது வாடகையை உயர்த்தி தொடர்ந்து கடைகள் இயங்க அனுமதிக்க விரும்புகிறதா, இல்லாதபட்சத்தில் வேறுஇடத்தில் இடம் வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பான அறிக்கையை ஏப்.2ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதுவரை தற்போதைய நிலையே தொடரும் எனவும் குறிப்பிட்டது.
இதற்கிடையே தெப்பக்குளத்தை பழமை மாறாமல் பராமரிக்கவும், மாரியம்மன் தெப்பக்குளம் போல் நிரந்தரமாக தண்ணீர் தேக்கவும் அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட உள்ளார்.