ADDED : ஜூன் 24, 2024 04:28 AM
மேலுார் : மேலுார் அரசு இருபாலர் பள்ளியில் மேலுார் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சாரா யோகா மற்றும் பிசியோ தெரபி சென்டர் இணைந்து உலக யோக தினம் கொண்டாடப்பட்டது.ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் தலைமை வகித்தார். ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் முரளி, ஷ்யாம், உஷாமூர்த்தி முன்னிலை வகித்தனர். இந் நிகழ்ச்சியில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வேலாயுதம், முரளி உலக அமைதி வேண்டி புறாக்களை பறக்கவிட்டனர். மரக்கன்றுகளை நட்டனர். பயிற்சியாளர் சூர்யா நன்றி கூறினார்.